ரிபப்ளிக் தொலைக்காட்சி பெண் நிருபர் முதல்வரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிய சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ஒரு ராணுவ வீரர். இவரை, நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருக்கும் சின்னச்சாமியும், அவரது உறவினர்களும் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர். இச்சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வின் இந்த அட்டூழியத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களுடன் நான் உண்ணாவிரம் இருப்பேன் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில், பிரபல ஆங்கில ஊடகமான ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பெண் நிருபர் ராணுவ வீரரின் மரணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு, எந்தவிதமான பதிலையும் அளிக்காமல் பொறுப்பற்ற முறையில் அவர் நடந்து கொண்ட விதம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.