தமிழக காவல்துறையை மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி குருமூர்த்தி காட்டமான முறையில் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அவர் பேசிய ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், அவர் கூறியதாவது ;
மத்திய ரிசர்வ் போலீஸ் குருமூர்த்தி. வி.சி.க. நிர்வாகியால் மிரட்டப்பட்டவன் நான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு ராணுவ வீரனை அடித்து கொன்றுள்ளனர். ஆளும் கட்சி தரப்பில். நான் அரசியல் பேச விரும்பவில்லை. தமிழகத்தில் என்னதான் நடக்கிறது. தமிழக காவல்துறைக்கு சம்பளம் மட்டும் கிடைத்தால் போதும் என்று நினைத்து விட்டார்களா? அப்படி, அவர்கள் நினைப்பார்களேயானால், மொத்தமாக அவர்களுக்கு விடுமுறை விட்டு விடுங்கள். மொத்த காவல்துறைக்கும் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு, மாத சம்பளம் வந்து விடும். எது நடந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருந்து விடுங்கள் என்று கூறி விடுங்கள். தமிழக காவல்துறைக்கு எதற்கு ரோந்து பணிக்கு பெட்ரோல் செலவு, துப்பாக்கி வைத்திருக்கும் காவலருக்கு சம்பளம். அனைத்து காவல் நிலையத்தையும் பூட்டி விட்டு சாவியை அறிவாலயத்தில் கொடுத்து விடுங்கள். காவலர்கள் அனைவரையும் வீட்டில் போய் தூங்க சொல்லுங்க என காட்டமான முறையில் பேசியிருக்கிறார்.
மேலும் விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.