இந்திய ராணுவ வீரரை அடித்து கொன்ற தி.மு.க. நிர்வாகியை ஏன்? கட்சியை விட்டு நீக்கவில்லை என பெண் நிருபர் எழுப்பிய கேள்விக்கு திரும்ப திரும்ப ஒரே பதிலை சொன்ன உதயநிதி ஸ்டாலின்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவ வீரராக பணியாற்றியவர். இவரது, அண்ணன் பிரபாகரனும்-33 ராணுவ வீரராக உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பிரபுவின் மனைவி பிரியா துணி துவைத்துக் கொண்டிருந்தார். இதனை, பார்த்த நாஹோகனஹள்ளி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சின்னச்சாமி இதனை கண்டித்து ஆபாசமாக திட்டியிருக்கிறார்.
இதையடுத்து, அங்கு வந்த பிரபுவிற்கும், தி.மு.க. கவுன்சிலருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அன்று மாலை 10-க்கும் மேற்பட்டோருடன் பிரபுவின் வீட்டிற்கு சின்னசாமி கும்பல் சென்று உள்ளது. இதையடுத்து, பிரபுவையும் அவரது அப்பாவையும் அக்கும்பல் கொடூரமான முறையில் தாக்கி இருக்கிறது.
இதில், படுகாயமடைந்த பிரபு ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ள மெளனமாக இருந்து வருகிறார்.
இதனிடையே, தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமாக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, ஆங்கில ஊடக நிருபர்கள் உதயநிதியை சூழ்ந்து கொண்டு பல்வேறு கேள்விகளை அடுக்கினர். அதில், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் நிருபர் ராணுவ வீரரின் மரணம் தொடர்பான கேள்வியினை முன்வைத்தார்.
இதற்கு, தெளிவான பதிலை அளிக்காமல் வேலைகாரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுவது போல பேசி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்த சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.