சாத்தான் குளத்திற்கு பொங்கிய கனிமொழி, உதயநிதி எங்கே?

சாத்தான் குளத்திற்கு பொங்கிய கனிமொழி, உதயநிதி எங்கே?

Share it if you like it

சாத்தான் குளம் இரட்டை கொலை சம்பவத்திற்கு பொங்கிய உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டவர்கள் எங்கே? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது, மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவருமே உள்ளூரில் கடை வைத்து இருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் கடையைத் திறந்து வைத்தாக கூறி இவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்தவகையில், இவர்கள் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது, காவலர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த தந்தையும் மகனும் அடுத்த சில நாள்களிலேயே சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். கடந்த, அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற இச்சம்பவத்தை, தி.மு.க.வும் அதன் அடிமை ஊடகங்களும் மிகப்பெரிய விவாத பொருளாக மாற்றியிருந்தது. இதையடுத்து, காவல்துறைக்கு எதிராகத் தமிழகமே வெகுண்டெழுந்தன.

இந்த, துயர சம்பவத்தை கண்டித்து அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். இதனை தொடர்ந்து, காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்களது சித்து வேலைகளை செய்தன. இதையடுத்து, தூத்துகுடி எம்.பி. கனிமொழி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் ஜெயராஜ் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். எனினும், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. அதே வேளையில், கழக கண்மணிகளின் அடாவடி தனத்தால் காவல்துறையினர், பொதுமக்கள் என பலர் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவ வீரராக பணியாற்றியவர். இவரை தான், தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது அடியாட்கள் அடித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த, துயர சம்பவத்திற்கு காரணமான தி.மு.க. நிர்வாகியை கண்டிக்காமல் தி.மு.க. தலைவர்கள் கள்ள மெளனம் காத்து வருகின்றனர். அதேவேளையில், படுகொலை செய்யப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறாமல் தி.மு.க. எம்.பி. கனிமொழி, உதயநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் எங்கே? பதுங்கி இருக்கின்றனர் என்பதே பலரின் கேள்வியாக உள்ளன. .


Share it if you like it