சென்னையில் பிரமாண்ட பேரணி… பா.ஜ.க. தலைவர் அதிரடி!

சென்னையில் பிரமாண்ட பேரணி… பா.ஜ.க. தலைவர் அதிரடி!

Share it if you like it

ராணுவ வீரர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நாளை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தப்படும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளன. எனினும், தி.மு.க. ஆட்சி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே நிதர்சனம். தமிழக மக்கள் இந்த ஆட்சியின் மீது கடும் கோவத்தில் இருந்து வருகின்றனர். கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் ஆள்கடத்தல் என சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது.

பொதுமக்கள் தனியே இரவில் வெளியே சென்று வர கூட அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இருந்து வருகிறது. தமிழக மக்களுக்கு இந்த நிலைமை என்றால், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவலர்களின் நிலைமை அதைவிட கொடுமையாக இருந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க, தமிழகத்தை சேர்ந்த இந்திய ராணுவ வீரர்களின் நிலைமை அதனைவிட பன்மடங்கு மோசமாக இருந்து வருகிறது.

இந்திய ராணுவ வீரர் குருமூர்த்தியை, வி.சி.க. நிர்வாகி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். எனினும், அவர் மீது என்ன? நடவடிக்கையை இந்த விடியல் அரசு எடுத்தது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபு. இவரை, தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது உறவினர்கள் அடித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. இதுதவிர, பா.ஜ.க. நிர்வாகிகள் தொடர்ந்து விடியல் ஆட்சியில் தாக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், பிப்- 21 (நாளை ) தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெறும் என தமிழக பா.ஜ.க. அறிவித்துள்ளது. இதில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it