கன்னியாகுமரியில் நடைபெற உள்ள ஹிந்து சமய மாநாட்டுக்கு தி.மு.க. அரசு இடையூறு செய்வதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தி.மு.க. அரசை கண்டித்து அதன் மாநில தலைவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், ஹிந்துக்களின் உரிமைகள், வழிபாட்டுமுறைகள் மற்றும் கோவில்களின் நிலைமை பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்த வகையில், ஸ்டாலின் ஆட்சியில் 100-க்கும் மேற்பட்ட ஹிந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தி.மு.க. நிர்வாகிகள் பலர் ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், கன்னியாகுமரியில் நடைபெற உள்ள ஹிந்து சமய மாநாட்டுக்கு தி.மு.க. அரசு இடையூறு செய்வதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ;
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமய வகுப்பு, திருவிளக்கு பூஜை மூலம் ஆன்மிக சேவைகளை செய்து வருபவர், ஹிந்து தர்ம வித்யாபீட தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ். ’85 ஆண்டுகளுக்கும் மேலாக ஹைந்தவசேவா சங்கம் சார்பில் நடந்து வருகின்ற ஹிந்து சமய மாநாட்டினை எதிர்த்து, ஆளும் தி.மு.க. வை சேர்ந்த அமைச்சர் மற்றும் கட்சியினர் சில தினங்களாக திட்டமிட்டு, இடையூறு செய்து வருகின்றனர் என இவர் கருத்து தெரிவித்துள்ளார். அவரது, பேட்டி ஒட்டு மொத்த குமரி வாழ் ஹிந்து மக்களின் மனவெளிப்பாடு, இச்சூழலில் திடீர் ஹிந்து ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கும் தி.மு.க. மேயர் மகேஷ், மண்டைக்காடு சமய மாநாடு சம்பந்தமாக ஹிந்து மத த்திற்கு ஆதரவாக பேசுவாதக கூறிக் கொண்டு வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜை மிரட்டுவது போன்று அறிக்கை கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
உண்மையிலேயே, இவருக்கு ஹிந்து மதபற்று இருந்திருந்தால் பல ஆண்டுகளாக நடந்து வருகின்ற சமய மாநாட்டுக்கு இடையூறாக இருப்பது ஏன்? இத்தனை ஆண்டுகளாக சமய பெரியார்கள் நடத்தி வந்த மாநாட்டை அரசு நடத்தும் என்று கூறும், திடீர் ஹிந்து பற்றாளர்களான தி.மு.க.வினர், தாங்களே நடத்துவதாக கூறுவது என்பது மிகப்பெரும் சதியின் பின்னணி என்று மக்கள் எண்ணுகின்றனர்.
இவர்கள் நோக்கம் ஹிந்து மதத்தை குறிவைத்து தாக்குவது தான். ஹிந்து சமய மாநாடு வழக்கம் போல் நடைபெற வேண்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விளக்கேற்றி அம்மனிடம் பிரார்த்தனை செய்வது மற்றும் வரும், 24-ம் தேதி நடைபெறும் கூட்டு பிரார்த்தனைக்கு, ஹிந்து முன்னணி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆன்மிக போராட்டத்துக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில், கன்னியாகுமரி மாவட்ட ஒட்டு மொத்த ஹிந்து சமுதாயமும் பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கும் என தெரிவித்து இருந்தார்.