நியூஸ் தமிழ் ஊடக நிருபரை தி.மு.க.வின் குண்டர்கள் தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர், உடல் நலகுறைவு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து, அத்தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் பிப்-27 தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. அந்த வகையில், காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை, எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தென்னரசு களம் காண்கிறார். அந்தவகையில், தி.மு.க. கூட்டணி ஓரணியாகவும், அ.தி.மு.க. மறு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், ஆளும் கட்சியான தி.மு.க. வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருள், பிரியாணி மற்றும் மதுவை வாரி இறைத்து வருகிறது. மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லாத வகையில் ஆடு மாடுகளை போல பட்டியில் அடைத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அதன் உண்மை தன்மையை அறியும் பொருட்டு தமிழ் ஊடகமான நியூஸ் தமிழ் 24×7 நேரடியாக கள ஆய்வில் இறங்கியுள்ளது.
இதனை, பொறுத்துக்கொள்ள முடியாத கழக கண்மணிகள் நியூஸ் தமிழ் ஊடக நிருபரிடம் எப்படி? படம் பிடிக்கலாம் என கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும், அவரை தாக்க முயன்று இருக்கின்றனர். இச்சம்பவம்தான், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.