இந்திய ராணுவ வீரர் பிரபுவை தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்ததை கண்டித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அக்கட்சியை வெளுத்து வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பிரபு-28. இவர், ராணுவ வீரராக பணியாற்றியவர். இவரை தான், தி.மு.க. கவுன்சிலர் சின்னசாமி மற்றும் அவரது அடியாட்கள் அடித்து கொலை செய்து இருக்கின்றனர். இச்சம்பவம், இந்தியா முழுவதும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. எனினும், தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் சாதித்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் பிப்ரவரி 21-ம் தேதி மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. இதில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அந்தவகையில், அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ரவுடிகளுக்கு கூட தி.மு.க. அரசு மீது பயம் இல்லை. மெழுவர்த்தி எரிந்து உருக்குலைந்து போவது போல தி.மு.க. ஆட்சியும் போகும். 2 மாதத்திற்கு ஒருமுறை இந்திய அளவில் பேசப்படும் பிரச்சினை தமிழகத்தில் இருந்து உருவாகிறது என குறிப்பிட்டு பேசினார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.