கும்மிடிப்பூண்டியை தாண்டாதவர்… தேசிய அரசியலுக்கு வந்துட்டாராம்: அண்ணாமலை கிண்டல்!

கும்மிடிப்பூண்டியை தாண்டாதவர்… தேசிய அரசியலுக்கு வந்துட்டாராம்: அண்ணாமலை கிண்டல்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில், நாங்கள் கை காட்டும் நபர்தான் பிரதமராக வர முடியும் என தி.மு.க. கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அதற்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார். இதுகுறித்து, பத்திரிகையாளர்களிடம் அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ; கும்மிடிப்பூண்டியை தாண்டாத கட்சி தி.மு.க. இந்த, கட்சி தேசிய அரசியலுக்கு வந்து விட்டது என்று கூறுவது சிறந்த நகைச்சுவை என்ற ரிதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it