நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர்!

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர்!

Share it if you like it

நீட் ரத்து ரகசியம் இதுதான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருக்கும் கருத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தி.மு.க.விற்கு தெரியும். கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இந்த அரசுக்கு ( அ.தி.முக. அரசு ) இருக்கிறதா என உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டம் ஒன்றில் காட்டமாக பேசியிருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 2 வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது.

எனினும், நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் கூறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது, அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் பேசும் போது இவ்வாறு கூறினார் ;

நீட் தேர்வு ரகசியத்தைக் கூறுமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ரகசியம் வேறொன்றுமில்லை. எங்கள் கல்வி உரிமை பறிக்கப்படும்போது அதை எதிர்த்து தைரியமாக குரல் கொடுப்பதுதான், அந்த ரகசியம் என தெரிவித்துள்ளார்.

Image

Share it if you like it