இஸ்லாமியர் குழந்தைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைத்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனிடையே, காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதல்வரை காண வந்த பெண்மணி ஒருவர் தனது குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் பெயர் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனை, ஏற்றுக்கொண்ட முதல்வர் அக்குழந்தையின் தந்தையின் பெயரை கேட்டு இருக்கிறார். அப்போது, அந்த பெண்மணி தனது கணவரின் பெயரான “ஷேக் அலாவுதீன்” என கூறினார். இதையடுத்து, முதல்வர் அக்குழந்தைக்கு கருணாநிதி என பெயர் சூட்டியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.
… தாய் அதிர்ச்சி!
