எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை என்ன ஆச்சு என நெட்டிசன்கள் கேள்வி? எழுப்பி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சாலையில் வைத்த ஃப்ளெக்ஸ் பேனரால் 23 வயது உடைய அப்பாவி இளம் பெண் சுபஸ்ரீ இறந்தார். இச்சம்பவம், அந்நாட்களில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சுபஸ்ரீ இல்லத்திற்கு நேரில் சென்று அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அதோடுமட்டுமில்லாமல், மாநிலத்தில் “பேனர் கலாச்சாரத்தை” முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து தனது கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக ஸ்டாலின் கூறியிருந்தார்.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது வாக்குறுதி கொடுத்தவர் இதே ஸ்டாலின். ஆனால், ஆட்சிக்கு வந்த பின்பு அதுகுறித்து எல்லாம் எங்களுக்கு கவலையில்லை என்ற ரீதியில்தான் தி.மு.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் விதமாக கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட 13 வயது உடைய சிறுவன் தினேஷ் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலக்கி இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், கொடி கம்பம், பேனர் என தி.மு.க.வினர் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.