சபாநாயகருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. டோஸ்!

சபாநாயகருக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. டோஸ்!

Share it if you like it

தமிழக சபாநாயகர் அப்பாவு தம்மை கிண்டல் செய்யும் வகையில் பேசுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. தெரிவித்து இருக்கும் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனராக இருப்பவர் வேல்முருகன். இவர், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தி.மு.க.வின் கூட்டணியில் இருந்தாலும், விடியல் ஆட்சியில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார். இதன்காரணமாக, தி.மு.க. மேலிடம் இவர் மீது கடும் உஷ்ணத்தில் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார். இந்த காணொளி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it