தி.மு.க.விற்கு கவர்னர் மாளிகை பதிலடி!

தி.மு.க.விற்கு கவர்னர் மாளிகை பதிலடி!

Share it if you like it

ஸ்டெர்லைட் ஆலை தற்போது தமிழகத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழிக்கு பதிலடி தரும் வகையில் ஆளுநர் மாளிகை பதில் அளித்திருக்கிறது.

இதுகுறித்து, ராஜ்பவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது ;

எண்ணித் துணிக நிகழ்ச்சியில் ”வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (FCR Act), பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் மாநிலத்தில் நடந்த போராட்டங்கள் குறித்து சில மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார்.

வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடையாக பெறுகிறது. அது ஒருமுறை என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ந்து அத்தகைய நன்கொடை வருமானால், அங்கு எஃப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும்…

.இந்த சட்டம் மூலம் அனைத்து வெளிநாட்டு நன்கொடை வரவும் உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக தென் மாவட்டத்தில் அணுஉலை திட்டத்துக்கான வேலை தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்ற தாக்கம், வெடிப்பு, மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன..

…யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது

வடகிழக்கு மாநிலங்களில் சிலர் போலி நிறுவனங்களை வெளிநாடுகளில் ஆரம்பித்து ரூ. 200 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி பெற்று இந்தியாவில் மதமாற்றத்துக்காக பயன்படுத்தினர். இதுபோன்ற தேச நலனை பாதிக்கும் விவகாரங்களில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. 

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக திட்டம் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற மிகப்பெரிய மனித உரிமை அமைப்பின் இடையூறால் ஓராண்டுக்கும் மேல் தடைபட்டது. பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், அரசு அனைத்தும் திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லியும் அதை நிறைவேற்ற முடியவில்லை.

.இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அதற்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்துள்ளது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது கவலைக்குரிய விஷயம்

இந்திய தேவையில் 40% தாமிரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது. அது மூடப்பட்டதால் இந்தியாவின் தாமிர தேவை பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மின்னணு உற்பத்திக்கு முக்கிய தேவை தாமிரம். அதன் உற்பத்தியை முடக்கும் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதியை பெற்றது தெரியவந்துள்ளது.


Share it if you like it