5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க. நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில், விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, பெண் காவலர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பதே நிதர்சனம்.
அந்த வகையில், கீழ்கண்ட சம்பவத்தை குறிப்பிட்டு சொல்லலாம் ; அதாவது, கடந்த டிசம்பர் 31-ம் தேதி சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அன்பழகனின் நூற்றாண்டு நிறைவுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா உள்ளிட்ட பல தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் பாதுகாப்புப் பணியிலிருந்த 22 வயதான இளம் பெண் காவலரிடம் அங்கிருந்த இளைஞர்கள் இருவர் பாலியல் தொல்லை கொடுத்தனர். ஒருகட்டத்தில் அந்தப் பெண் காவலர் கதறி அழுதுகொண்டே தனக்கு நடந்த சம்பவத்தைத் தனது மேல் அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் உடனடியாக, அங்கிருந்து தப்ப முயன்ற இருவரையும் மடக்கிப்பிடித்தார்.
விசாரணையில், அவர்கள் இருவரும் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (23), சின்மயா நகரைச் சேர்ந்த ஏகாம்பரம் (24) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் தி.மு.க. 129-வது வட்ட இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் பக்கிரிசாமி. இவர், அப்பகுதியை சேர்ந்த 5 -வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். பெற்றோர், கொடுத்த புகார் அடிப்படையில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.