தி.மு.க.வின் ஊழல் பட்டியலை நாளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட உள்ளார். இந்த நிலையில், தி.மு.க. குடும்பத்தை குறித்த சிறிய காணொளி ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர், தி.மு.க.வின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார். அந்த வகையில், நாளை காலை 10.15 மணிக்கு வெளியிட உள்ளார். இதில், தி.மு.க.வின் ஆட்சிக்காலம் மட்டுமில்லாமல், கடந்த ஆட்சிக் கால ஊழல் பட்டியலும் சேர்த்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இவர், வெளியிட போகும் ஊழல் பட்டியல் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி விட்டிருக்கிறது. 2ஜி ஊழல் விசாரணையைக் கூட துரிதப்படுத்தி உள்ளோம் என்று சமீபத்தில் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனிடையே, தி.மு.க. மூத்த தலைவரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா நான் விரைவில் சிறை செல்ல நேரிடும் என அண்மையில் அலறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், “தி.மு.க. பைல்ஸ் நாளை காலை 10.15 மணி” வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.