Share it if you like it
முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டன. இதற்கு, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதாவது, 100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் இனி 1000 ரூபாய். 20 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 200 ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே, கடந்த மார்ச்-20 ஆம் தேதிதான் பத்திரப்பதிவு கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என விடியல் அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it