ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு வெற்றி பெற்றதில் ஆளும் கட்சிக்கு பங்கு இருக்குமோ? என கூட்டணி கட்சியின் தோழர்கள் அரண்டு போய் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த ( கடந்த ஆண்டு விஜயதசமி தினத்தன்று ) அந்த அமைப்பு திட்டமிட்டு இருந்தது. இதற்கு, தி.மு.க. அரசு அனுமதி தர மறுத்து விட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய நிலையில், அணிவகுப்பை நடத்திக் கொள்ள கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 16-ம் தேதி சென்னை கொரட்டூர் மற்றும் ஊரப்பாக்கம் உட்பட தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இப்படிப்பட்ட சூழலில், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு வெற்றி பெற தி.மு.க. காரணமாக அமைந்து விட்டது என அதன் கூட்டணி கட்சியின் தோழர்கள் அலறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.