தமிழகத்தில் ஒரு லாக்கப் மரணங்கள் கூட நடைபெறவில்லை என தமிழக முதல்வர் ஸ்டாலின் பச்சை பொய்யை கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின்பு லாக்கப் தொடர்பான மரணங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மக்களிடம் உண்மையை எடுத்துகூற வேண்டிய ஊடகங்கள், பத்திரிகைகள் தி.மு.க. ஆட்சி என்பதால் வழக்கம் போல கள்ள மெளனமாக இருந்து வருகின்றன. இதனிடையே, ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர் (வயது 21) மணிகண்டன். இவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பயின்று வந்த மாணவர். கல்லூரியை முடித்து விட்டு வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் அவரது வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாணவர் தனது பைக்கை சில மீட்டர் தூரம் தள்ளி நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், கடும் கோவம் கொண்ட காவல்துறையினர் மாணவனை நடுரோட்டில் போட்டு அடித்து உதைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கேயும் அவர் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதையடுத்து, மணிகண்டனின் பெற்றோரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு உங்கள் மகனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற மாணவன் மாலையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார்.
இதனை தொடர்ந்து, சென்னனை பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்தவர் (25) விக்னேஷ். இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 19.4.2022 அன்று காவல்துறையினர் விசாரணையின் போது லாக்கப்பில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
அதேபோல, சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செங்குன்றத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மரணம் அடைந்தார். இவ்வாறாக, தொடர்ந்து விடியல் ஆட்சியில் லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தான், சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் சாதி, மத சண்டைகள் இல்லை. காவல்நிலைய மரணங்கள் இல்லை, எந்தவித குறுக்கீடும் இன்றி காவல்துறையை செயல்பட அனுமதித்துள்ளோம் என முதல்வர் பேசியுள்ளார். மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் எந்த ஆட்சியில் நடைபெற்றது என்பதை முதல்வர் விளக்கி கூறுவாரா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.


