தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் மிக கடுமையாக சாடிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
பாம்பு சட்டை, உளவுத்துறை, கபடி கபடி, நினைக்காத நாளில்லை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தவர் ராஜன். இவர், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, பத்திரிகையாளர்களை அவர் சந்தித்தார். அந்த வகையில், நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என ஆளும் கட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.