‘செல்லமா தட்டுனாரு’…கோபாலபுர மீடியா பயிற்சி!

‘செல்லமா தட்டுனாரு’…கோபாலபுர மீடியா பயிற்சி!

Share it if you like it

அமைச்சர் அன்போடு என் தலையில் தட்டினார் என கலாவதியை சொல்லுமாறு வற்புறுத்திய கோபாலபுர ஊடகங்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பாலவநத்தம் ஊராட்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டர்.

May be an image of 3 people and text that says "இந்து தமிழ் Tamil The Hindu Favorites 3m 'வருவாய் துறை அமைச்சர் என்னை அடிக்கவில்லை; அவர் என் குடும்பத்தில் ஒருவர்' மனு கொடுத்த பெண் விளக்கம் i வான்நிலா இந்தியாவுக்கே முன்மாதிரியான மாடல், No-1முதல்வர்னு சொல்லிட்டு போயிருவோம் உயிர் வாழனும்ல.!"

இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அப்போது, பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கலாவதி (45) என்பவரும் அமைச்சரிடம் மனு கொடுத்து இருக்கிறார். அப்பொழுது, தனது குடும்ப சூழ்நிலையை அமைச்சரிடம் உருக்கமுடன் எடுத்து கூறி இருக்கிறார். இதுதவிர, கடந்த பல வருடங்களாகவே தனது பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும்படி மனு கொடுத்து வருவதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை எனவும் அமைச்சரிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்.

இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் கலாவதி கொடுத்த மனுவை வைத்தே அவரது தலையில் ஓங்கி அடித்து இருக்கிறார். இச்சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் விடியல் அரசுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தான், கோபாலபுர ஊடகங்கள் கலவாவதியை சந்தித்து அமைச்சர் தன்னை செல்லமாக தட்டினார் என பேசுமாறு வற்புறுத்திய காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாக துவங்கி இருக்கிறது.


Share it if you like it