தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது தூக்கம் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. எனினும், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, கழக கண்மணிகளின் அட்டூழியங்கள், அடாவடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மறுபுறம், தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க. மூத்த தலைவரும் நிதியமைச்சருமாக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவரது, ஆடியோ அண்மையில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, பலர் தி.மு.க.வை சாடி வருகின்றனர். இந்த நிலையில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னை நிம்மதியாக தூங்க விடுங்க என்று தனது கட்சி தலைவர்கள் முன்பாக அலறிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.