ஆடியோ விவகாரம்: அமைச்சருக்கு தி.மு.க. உதவாது?

ஆடியோ விவகாரம்: அமைச்சருக்கு தி.மு.க. உதவாது?

Share it if you like it

தி.மு.க. ஃபைல்ஸ் என்கிற பெயரில் தி.மு.க.வினரின் சொத்துப்பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல்-14- ஆம் தேதி வெளியிட்டார். இதில், பல முக்கியப் புள்ளிகளின் சொத்துப் பட்டியலை பா.ஜ.க. தலைவர் அம்பலப்படுத்தி இருந்தார். இதையடுத்து, தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்து. இப்படியாக, தி.மு.க.விற்கு சோதனை மேல் சோதனை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மே மாதம் 2-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போவதாக ஸ்டாலின் அறிவித்தார். இதனால், பி.டி.ஆரின் பதவி பறிபோகும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னால் பி.டி.ஆரின் ஆடியோவே மிக முக்கிய காரணமாக? இருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் தான், தி.மு.க.வின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமாக இருப்பவர் டி.கே.எஸ். இளங்கோவன். இவர், ஆடியோ விவகாரம் தனிப்பட்டது என்பதால் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தான் வழக்கு தொடுக்க வேண்டும் தி.மு.க. தொடுக்காது என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் மகனும் மருமகனும் ஒரு வருஷத்தில் 30,000 கோடி அடிச்சுட்டார்கள் என்று அதே கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் பேசுவது தனிப்பட்ட கருத்தா?

அப்போ அவர் வழக்கு தொடுக்கவில்லை என்றால் அது உண்மையான ஆடியோதான் என்பதை எடுத்துகொள்ளலாமா? அது உண்மையாக உள்ள பட்சத்தில் அவர் கூறியவைகளும் உண்மை எனக் கொள்ள வேண்டியதுதான். ஏன் என்றால் நிதி அமைச்சர் அவர். இந்த திமுக நிலைப்பாடு PTR கை கழுவப்பட்டார் என்று அர்த்தம் கொடுக்கிறதா? என நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.


Share it if you like it