என் வாழ்க்கை வரலாற்று படம்:  நயன்தாரா நடிக்க வேண்டும் – கனிமொழி விருப்பம்!

என் வாழ்க்கை வரலாற்று படம்: நயன்தாரா நடிக்க வேண்டும் – கனிமொழி விருப்பம்!

Share it if you like it

என்னை பற்றி பயோபிக் படம் எடுத்தால் அதில் நடிகை நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என கனிமொழி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்த, காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கனிமொழி. இவர், அண்மையில் பிரபல யூ டியூப்பர் மதன் கவுரிக்கு பேட்டியளித்தார். அப்போது, உங்கள் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுத்தால், அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என மதன் கவுரி கேள்வி எழுப்பினார்?. இதற்கு, முதலில் கனிமொழி வெட்கப்பட மீண்டும் அதே கேள்வியை முன்வைத்தார் மதன். நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்குமா? என மதன் கூறினார். அதற்கு, கனிமொழி நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it