திராவிட நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!

திராவிட நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!

Share it if you like it

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்படத்தின் காட்சிகள் திருவாரூரில் ரத்து செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர், அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அக்கட்சியை விமர்சனம் செய்தார். இதன் பின்னணியில், தி.மு.க. இருந்தது என்பது யாரும் மறக்க முடியாத உண்மை. அதேபோல, ஹிந்தி தெரியாது போடா என்ற டீ சர்ட்டை அணிந்து கொண்டு தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்பட்டார். இப்படியாக, இந்த திராவிட நடிகையின் செயல்பாடுகள் இருந்து வந்தன. இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த ஆட்சியில் நடைபெற்று வரும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கண்டிக்காமல் கள்ள மெளனமாக இருந்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு.

இப்படிப்பட்ட சூழலில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கும் திரைப்படம்தான் ‘ஃபர்ஹானா’. இப்படம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்கில் இன்று வெளியாக இருந்தது. எனினும், இப்படத்திற்கு, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இதையடுத்து, ஃபர்ஹானா திரைப்படத்தின் காட்சிகளை ரத்து செய்வதாக திரையங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் திராவிட நடிகைக்கு இப்படி ஒரு சோகம் ஏற்பட வேண்டுமா? என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it