மாணவர்களிடம் பிரிவினையை திணிக்கும் தி.மு.க.?!

மாணவர்களிடம் பிரிவினையை திணிக்கும் தி.மு.க.?!

Share it if you like it

தி.மு.க. ஆட்சியில் பிரிவினையை வளர்க்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறன.

தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட தி.மு.க. அதில், இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம். பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். ’தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்’ என்று கடந்த கடந்த மாதம் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் ஆ. ராசா பேசி இருந்தார்.

இதனை தொடர்ந்து, ஆதன் ஊடக நெறியாளர் மாதேஷ். முகில் என்பவரை கடந்த ஆண்டு பேட்டி கண்டார். அப்பொழுது, இவரின் பேச்சு முழுக்க முழுக்க இந்தியாவிற்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டும் வகையில் அமைந்து இருந்தது. இவரது, பேச்சினை கண்டிக்காமல், நெறியாளர் பேச விட்டு அழகு பார்த்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன.

இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநில செயலாளருமான அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகீர் தகவல் ஒன்றினை பதிவு செய்து இருக்கிறார்.

பள்ளிகளில் இந்த சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதாக அறிகிறேன் “இந்தியா எனது தாய்நாடு, இந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தோர்” என்று உறுதி மொழி ஏற்கும் மாணவர்களின் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும் இந்த செயல் நயவஞ்சகமானது என ஆளும் கட்சியின் சூழ்ச்சியை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி இருக்கிறார்.

பொதுமக்களை தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் பிரிவினையை திணிக்கும் முயற்சியை விடியல் அரசு செய்ய முயல்கிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image


Share it if you like it