மாட்டுக் கொட்டகையில் பால்வாடி… ‘ஐ டோன்ட் கேர்’… நான் ரொம்ப பிஸி!

மாட்டுக் கொட்டகையில் பால்வாடி… ‘ஐ டோன்ட் கேர்’… நான் ரொம்ப பிஸி!

Share it if you like it

அங்கன் வாடியில் பயிலும் பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் கேள்விக் குறியாக மாறி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பொதுமக்கள் வரை தி.மு.க. அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக் குறியாக மாறி இருக்கிறது. இதுதவிர, மாணவிகளுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வருகின்றன. அந்த வகையில், பாலியல் சீண்டல் காரணமாக கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை. சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்த மாணவி தற்கொலை என பெண் குழந்தைகளின் நிலை குறித்து பெற்றோர்கள் அச்சப்படும் சூழ்நிலையே தமிழகத்தில் தற்போது வரை இருந்து வருகின்றன.

இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தீவிர ஆதரவாளர் சரவெடி சரண், பால்வாடி படிக்கும் போதே வாங்கி கொடுத்தோம் பூந்திய 8-வது பாஸ் ஆன பின்பு எடுக்க வைத்தோம் வாந்திய என்று பாலியல் சீண்டல்களை தூண்டும் விதமாக அண்மையில் பாடல் ஒன்றினை பாடி இருந்தார். வி.சி.க.வை சேர்ந்தவர் என்பதால் தி.மு.க. அரசு அவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.

இது ஒருபுறம் என்றால், விடியல் ஆட்சியில் பால்வாடி செல்லும் குழந்தைகளின் நிலை அதை விட மிக மோசமாக இருக்கிறது என்பதற்கு இக்காணொளியே சிறந்த உதாரணம். பெருந்துறை சட்டமன்றம் கருமாண்டி செட்டிபாளையம் பேரூராட்சி வார்டு எண்: 15 – ல் இந்த அங்கன் வாடி அமைந்து இருக்கிறது. இவ்விடம், முழுவதும் புதர் மண்டி இருக்கிறது. அந்த வகையில், இங்கு பூரான், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்ட, இடத்தில் தான் பச்சிளம் குழந்தைகள் பயிலும் பால்வாடி அமைந்து இருக்கிறது. பால்வாடி குழந்தைகளின், உயிர் பற்றியே துளியும் கவலைப்படாத இந்த அரசு. பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சிந்திக்க நேரம் எங்கே இருக்க போகிறது? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it