உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க… பிரதமருக்கு காசு கொடுத்து உதவியவரே   ஸ்டாலின்தான் – தி.மு.க. நிர்வாகி அதிரடி!

உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்க… பிரதமருக்கு காசு கொடுத்து உதவியவரே ஸ்டாலின்தான் – தி.மு.க. நிர்வாகி அதிரடி!

Share it if you like it

தி.மு.க. மாணவரணி செயலாளர் அமுதரசன் உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுக்கத் தொடங்கியது. இந்த போர் சுமார் ஓராண்டை கடந்தும் இன்றுவரை நடைபெற்று வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகள் பல்வேறு வழிகளில் உதவி வருகின்றன. அதோடு, ரஷியா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்திருக்கின்றன. இப்போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், போர் நின்றதாக தெரியவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை பாரதப் பிரதமர் மோடி இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கூறிவருகின்றன. இதனிடையே, உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை பாரதப் பிரதர் மோடி மீண்டும் தாயகம் அழைத்து வந்த சம்பவத்தை இன்றுவரை உலக நாடுகள் வியப்போடு பார்த்து வருகின்றன. உக்ரைனின் சிக்கிய தனது நாட்டு மாணவர்களை மீட்க வல்லரசு நாடுகள் திணறின. ஆனால், தனது ராஜதந்திர நடவடிக்கையின் மூலம் இந்தியர்களை மீட்ட பெருமை பாரதப் பிரதமர் மோடியை சாரும்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மாணவரணி செயலாளர் அமுதரசன் லிபர்டி இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார் ; உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க பாரதப் பிரதமர் மோடிக்கு உதவி செய்தவர் ஸ்டாலின். அதாவது, எல்லா செலவுகளையும் தி.மு.க. அரசு செய்தது போல ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார் அமுதரசன். இந்தியாவிலேயே, அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

Image
Image

Share it if you like it