இது கிறிஸ்தவர்கள் ஆட்சியாம்: சபாநாயகர் அப்பாவு ஒப்புதல்!

இது கிறிஸ்தவர்கள் ஆட்சியாம்: சபாநாயகர் அப்பாவு ஒப்புதல்!

Share it if you like it

தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியவர்கள் கிறிஸ்தவர்கள். அதாவது இது, கிறிஸ்தவ ஆட்சிதான் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்து இருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதல்வராக இருப்பவர் ஸ்டாலின். இவர், பதவியேற்ற சமயத்தில் அனைவருக்குமான அரசாக தி.மு.க. திகழும் என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தார். மேலும், எனது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தவறு செய்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை உண்டு கூறினார். ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் முதல்வரை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

அந்த வகையில், பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் அன்பில் மகேஷ். இவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆலோசனை கூட்டத்தை திருச்சியில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடத்தி இருந்தார். இதில், கலெக்டர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு உயர் அதிகாரிகளுக்கு தி.மு.க. அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா என தமிழக பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியினர் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

கலெக்டர், கமிஷனர், கட்சி அலுவலகத்தில் - எல்லை மீறிய தி.மு.க அமைச்சர்..! 

இதனை தொடர்ந்து, தி.மு.க. மூத்த தலைவரும், உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளை தனது கட்சி அலுவலகத்திற்கே நேரில் வரவழைத்து கூட்டம் போட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

Image

இப்படியாக, தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ஸ்டாலினை பொருட்டாக மதிக்காமல் தங்களது விருப்பம் போல செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், தி.மு.க. மூத்த தலைவரும், சபாநாயகருமான அப்பாவு, கிறிஸ்தவ பாதிரியார்கள் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது;

என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது கத்தோலிக்க தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க சகோதரிகள் தான். நான் அடிக்கடி சொல்வேன். இது உங்கள் அரசு. உங்களால் உருவாக்கப்பட்ட அரசு. நீங்கள் விரதம் இருந்து கொண்டு வந்த அரசு. ஆண்டவரிடம் வேண்டி விரும்பி நீங்கள் கொண்டு வந்த அரசு. இந்த அரசு உங்களுக்கான அரசு. இந்த திராவிட மாடல் அரசு அமைய காரணம் இந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் தான். ஆகவே, உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நானும், இனிக்கோ இருதயராஜ் துணை நிற்போம் என கூறியிருக்கிறார். இது, அனைவருக்குமான அரசு என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இந்த நிலையில் தான், தி.மு.க. அமைச்சர்கள் போன்று தற்போது சபாநாயகர் அப்பாவும் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it