முதல்வரை நம்பில் இழுத்து விட்ட சபாநாயகருக்கு இந்தியா முழுவதிலுமிருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் சபாநாயகராக இருப்பவர் அப்பாவு. இவர், நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள செயின்ட் பால்ஸ் பள்ளிக்கு சென்று இருந்தார். அப்போது, இவர் பேசியதாவது; என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்தது கத்தோலிக்க தந்தையர்கள் மற்றும் கத்தோலிக்க சகோதரிகள் தான். நான் அடிக்கடி சொல்வேன். இது உங்கள் அரசு. உங்களால் உருவாக்கப்பட்ட அரசு. நீங்கள் விரதம் இருந்து கொண்டு வந்த அரசு. ஆண்டவரிடம் வேண்டி விரும்பி நீங்கள் கொண்டு வந்த அரசு.
இந்த அரசு உங்களுக்கான அரசு. இந்த திராவிட மாடல் அரசு அமைய கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் காரணம். இது, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்கு தெரியும். உங்கள் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்லுங்கள். இதற்கு, நானும் தம்பி இனிக்கோ இருதயராஜ் துணை நிற்போம். நீங்கள் இல்லாமல், தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை. கிறிஸ்தவ மிஷனரிகள் இல்லை என்றால், தமிழகம் பீகார் போல் மாறி இருக்கும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்தவர்கள் என தெரிவித்து இருந்தார்.
பீகாரை சேர்ந்தவர்கள் தமிழகத்தை நோக்கி வேலை தேடி வருகின்றனர் என தி.மு.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து, ஹிந்தி படித்தால் பானிப் பூரிதான் விற்க வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசி இருந்தார். இந்த நிலையில் தான், கிறிஸ்தவ மிஷனரிகள் இல்லை என்றால், தமிழகம் பீகார் போல் மாறி இருக்கும் என சபாநாயகர் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியாக, தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பீகார் மாநிலத்தை தொடர்ந்து மட்டம் தட்டியே பேசி வருகின்றனர். இது, அம்மாநில மக்களிடையே கடும் கோவத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுதான், தற்போது நாடு முழுவதும் பேசுப் பொருளாக மாறி இருக்கிறது. விடியல் ஆட்சியில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்க, நமக்கு எதுக்கு ஊர் வம்பு என தி.மு.க.வை நெட்டிசன்கள் மிக கடுமையாக சாடி வருகின்றனர்.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வராக இருக்க மிக முக்கிய காரணமே பீகாரை சேர்ந்த பிரஷாந்த் கிஷோர் பாண்டே என்பதை தி.மு.க.வினர் ஏன்? மறந்து விட்டனர் என்பதே பலரின் கேள்வியாக்க உள்ளது.