ஏ1 குற்றவாளி: பொன்முடியை நீக்க வேண்டும் பா.ஜ.க. வெளியட்ட காணொளி!

ஏ1 குற்றவாளி: பொன்முடியை நீக்க வேண்டும் பா.ஜ.க. வெளியட்ட காணொளி!

Share it if you like it

அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க. காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர், கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார். இவரது மகன் கெளதம் சிகாமணி செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக, மண் சுரண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இதனால், தமிழக அரசுக்கு ரூ. 28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஏ1 குற்றவாளியாக பொன்முடியும், அவரது மகன் கெளதம் சிகாமணி ஏ2 குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை கெளதம் அணுகினார். இந்த வழக்கை தடை செய்ய முடியாது என சேன்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. அமைச்சர் குற்றம் செய்ததற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக நீதிபதி சந்திரசேகரன் அனுமானித்திருக்கிறார். இந்த வழக்கில் ஏ 1 குற்றவாளியாக அமைச்சர் இருப்பதால். அவரை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க. உட்பட பல்வேறு கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்தான காணொளியை பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it