செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தமிழகம் வந்துள்ள வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் தி.மு.க. அவமதித்ததா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரம், அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் வருகிற 28- ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இப்போட்டிகள், அடுத்த மாதம் ஆகஸ்டு 10- ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தியாவில், முதன் முறையாக இப்போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில், சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டவர்கள் செஸ் திருவிழாவில் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 19- ஆம் தேதி ஒலிம்பியாட் போட்டியின் தீப தொடர் ஓட்டத்தை பாரதப் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்த வகையில், இந்த தீப தொடர் 40 நாட்களில், இந்தியாவில் 26 மாநிலங்களில் உள்ள முக்கியமான 75 நகரங்களில் பயணித்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்திற்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து, 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் விதமாக நாளை 28. 07. 2022 ஆம் தேதி சென்னை வர இருக்கிறார். இதனை தொடர்ந்து, பாரதப் பிரதமர் மோடி தங்கும் நட்சத்திர விடுதி, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரலாறு காணாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இதனிடையே, உலக நாடுகளே இந்த செஸ் திருவிழாவை காணும் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில், இது இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மிகுந்த பெருமையை சேர்க்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆகவே, தமிழகத்திற்கு வரும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு உண்டு. இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய செஸ் வீரர்களுக்கு, ரூ.50, துண்டு, ரூ.20 பூ மாலைகள் போட்டு அவமதிப்பு செய்து விட்டதாக சவுக்கு சங்கர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அந்த துண்டின் மதிப்பு வெறும் பத்து ரூபாய் இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.