பெரம்பலூரில் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்தான, காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். தவிர, கோவில் சிலைகள் மர்ம நபர்களால் தொடர்ந்து இடிக்கப்பட்டு வரும் செய்திகள் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வி.களத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் வகையறா கோயில் வாகனங்கள் வைக்கப்பட்டிருந்த மண்டபம் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து, 02.6.2021 அன்று வேப்பூர் ஒன்றியம் எழுழூர் கிராமத்தில் அய்யனார் கோயிலில் உள்ள சிலைகள் உடைக்கப்பட்டன. அதேபோல, சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான மலை மீது அமைந்துள்ள பெரியசாமி, செல்லியம்மன் மற்றும் சப்த கன்னிமார் கோயில் சிலைகள் கொடூரமாக தகர்கப்பட்டு இருந்தன.
இப்படியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கோவில்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில்தான், பெரம்பலூர் அருகே உள்ள புகழ்பெற்ற ஏகாம்பரேஸ்வரர் கோவில்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கோவில் சிலைகளை உடைத்தவன் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்தான் என வழக்கம் போல கதையை கூற ஆரம்பித்து விடுவார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், விவரங்களுக்கு தினமலர் பத்திரிகை செய்தியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.