தி.மு.க. மூத்த தலைவர் ராதா கிருஷ்ணன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரியான கேள்விகளை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக முன்வைத்து இருக்கிறார்.
தி.மு.க. தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இதில் நியாயம் சொல்லுங்கள். 1, கடலூர் மக்களவை தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் முந்திரி வியாபாரி கோடிஸ்வரர். இவர், அ.தி.மு.க. ஆதரவாக இருந்தவர். பணம் இருந்த ஒரே காரணத்தால் எம்.பி சீட் வாங்கினார். தி.மு.க.வினருக்கே தெரியாது இவர் யார் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி. இவருக்குச் சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த, மேலமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில். கோவிந்தராசு குடும்பத்தினர் கொலை வழக்காக மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதில் முதல் நபராக குற்றம் சாட்டப்பட்டிருந்த ரமேஷ், கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அதே ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. 2, தி.மு.க. திருநெல்வேலி எம்.பி. ஞான திரவியம் (ரியல் எஸ்டேட் வியாபாரம்) குற்றவியல் வழக்கு பதிவு ஆகிவிட்டது.
3) தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் குரல் பதிவுகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தி.மு.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய, “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்,” என்று நிதியமைச்சர் கூறுவதைப் போல இருந்தது. (அதன் உண்மைத்தன்மை சுயாதீனமான முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.) இதன் மீது எந்த நடவடிக்கள் திமுக எடுக்க வில்லை. இப்படி பல, பலர் தி.மு.க.வில் உள்ளனர் என ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.