வெற்று விளம்பரத்திற்கு ரூ.80 கோடி… விவசாயிகளுக்கு தெருக்கோடியா?

வெற்று விளம்பரத்திற்கு ரூ.80 கோடி… விவசாயிகளுக்கு தெருக்கோடியா?

Share it if you like it

மழை நீரில் பாதிக்கப்பட்டு வீணாகி போன நெல்மூட்டைகள் குறித்த காணொளி ஒன்றி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆன பின்பு வெட்டி விளம்பரத்திற்கும், மறைந்த முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான கலைஞருக்கு மட்டுமே, அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருவதாக பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கு வகையில், 2,500 கோடியில் பூங்கா, 100 கோடியில் ஈ.வெ.ரா.விற்கு சிலை, மெரினாவில் 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் என, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை தமிழக முதல்வர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தான், கலைஞர் கருணாநிதியின் எழுத்தாற்றலை நினைவுக்கூறும் விதமாக, நடுக்கடலில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் மெரினா கடற்கரையில் ரூ. 80 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்து இருந்தது. இதற்கு, தமிழக மக்கள் மட்டுமில்லாது பல்வேறு சமூக அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன.

இப்படியாக, தி.மு.க. அரசு பயனற்ற திட்டங்களுக்கு மட்டுமே அதிக நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியை சேர்ந்த விவசாயி, எனது வயலில் 6 மூட்டை நெல் விதைத்தேன், அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி நட்டமாகி விட்டது. நெல்லை அறுக்க ஆள் இல்லை, பழைய படி மழை வந்து விட்டது. இப்போது, நெல்லை அறுத்து வெயிலில் காய வைத்து விற்பனை செய்ய முயன்றால், தரமற்ற முறையில் நெல் இருப்பதாக கூறுகிறார்கள் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேதனையுடன் பேசிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு நெல்கொள்முதல் நிலையங்கள் போதிய பராமரிப்பின்றி இருந்து வருகின்றன. அதன்காரணமாக, 50,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகி விட்டது என பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், பல்லாயிர கணக்கான நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகி இருக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

பயனற்ற திட்டங்களுக்கு செலவிடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்களின் துயர்களை துடைக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ரூ.6,000-த்தை மத்திய அரசு வருடம் தோறும் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it