பதினோராம் வகுப்பு மாணவிகள் மதுபோதையில் சாலையோரம் மயங்கி கிடந்த சம்பவம் தமிழகத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இன்று உலகிற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழர்களுக்கு என்று உலகம் முழுவதும் நற்பெயர் இருந்து வருகிறது. ஆனால், திராவிட ஆட்சியில் தமிழ் கலாச்சாரம் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருவது சமூக ஆர்வலர்களையும் கடந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பலர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியை வழங்கி இருந்தனர்.
இதையடுத்து, இளம்பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பிலுமிருந்து தி.மு.க.விற்கு ஆதரவு கிடைத்தன. இதன்காரணமாக, அக்கட்சி அரியணையில் அமர்ந்தது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டு வருடம் நிறைவு பெற்றுள்ளது. ஆனால், இன்று வரை தாம் கொடுத்த வாக்குறுதியை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்பதே நிதர்சனம். இது ஒருபுறம் இருக்க, மதுவால் தமிழக பெண்களின் வாழ்வும் தொடர்ந்து சீரழிந்து வருகிறது. எங்கள், ஆட்சியில் மதுக்கடைகளை மூடுவோம் என கூறிய கனிமொழி இன்று வரை வாய் திறக்காமல் கள்ள மெளனம் காத்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், கரூர் மாவட்டத்தை சேர்ந்த கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் மது உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருநபொருட்களை பயன்படுத்தி வந்த ஆண்டுகளுக்கு நிகராக தற்போது பெண்களும் அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகளும் அந்த பட்டியலில் இணைந்து இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.
கரூர் சர்ச் கார்னர் பகுதியில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மதுபோதையில் மயங்கி கிடந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன. ஆனால், தமிழக முதல்வர் மக்களிடம் கருத்து கேட்பதாக கூறி ரம்மி விளையாட்டை தடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது கொடுமையிலும் கொடுமை என்பது குறிப்பிடத்தக்கது.