தமிழக அரசு செவி சாய்க்குமா? விவசாயி வேதனை!

தமிழக அரசு செவி சாய்க்குமா? விவசாயி வேதனை!

Share it if you like it

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது தோட்டத்தில் விளைந்த நெல் மூட்டைகள் சரியான விலைக்கு போகாதது பற்றி வேதனையுடன் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியை சேர்ந்த விவசாயி வேதனையுடன் கூறியதாவது ; எனது வயலில் 6 மூட்டை நெல் விதைத்தேன், அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி அழுகி நட்டமாகி போய் விட்டது. நெல்லை அறுக்க ஆள் இல்லை, பழைய படி மழை வந்து விட்டது. இப்பொழுது, நெல்லை அறுத்து வெயிலில் காய வைத்து விற்பனை செய்ய முயன்றால், தரமற்ற முறையில் நெல் இருப்பதாக கூறி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அவர் பேசிய காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள சி.கீரனூர் என்ற கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இதனை நம்பி சுற்று வட்டாரங்களில் உள்ள விவசாயிகள், அனைவரும் தாங்கள் அறுவடை செய்திருந்த நெல் மூட்டைகளை குவித்து வைத்து இருந்தனர். விவசாயிகள் தங்களிடம் உள்ள மூட்டைகளை, குவிக்க தொடங்கியதன் காரணமாக டன் கணக்கில் நெல் மூட்டைகள் குவிந்தது. இதனை தொடர்ந்து, நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அவ்வப்போது பெய்து வந்த கனமழையின் காரணமாக 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகியுள்ளது. இதனால், கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் மழையால் சேதமடைந்ததை கண்டு விவசாயிகள், கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி தனது வேதனையை வெளிப்படுத்திய பேசிய காணொளி தற்பொழுது வைரலாக துவங்கியுள்ளது.


Share it if you like it