தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலைகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தற்போது குவிந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. விடியல் கிடைக்கும் என்று நம்பிய மக்கள் அதன் பலனை தற்போது மெழுவர்த்தி வெளிச்சத்தில் அனுபவித்து வருகின்றனர். இதுதவிர, மக்களின் அடிப்படைவசதிகள் பெரும்பாலும் சரியாக மற்றும் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனம். அந்தவகையில், வேலூர் மாநகராட்சி தற்போது ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் சிமெண்ட் கொட்டி சாலை அமைக்கப்பட்டு இருந்த சம்பவம் தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதியதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு நமது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 2269 கோடி ரூபாய் நிதியாக வழங்கியுள்ளது தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த அரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது என குறிப்பிட்டுள்ளார் அதன் லிங்க் இதோ.
இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சாலையின் நடுவில் 8 மின் கம்பங்கள் வைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளதாக இணையதளவாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதேபோல, விடியல் ஆட்சியில் போடப்பட்ட சாலை குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கிறது.
இதையடுத்து, கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே விடியல் ஆட்சி அமைத்த சாலை குறித்தான புகைப்படம் ஒன்றினை தனது ட்விட்டர் பக்கத்தில் இணையதளவாசி ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதன் லிங்க் இதோ. இப்படியாக, மக்களின் அடிப்படை தேவைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.