தமிழக முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும் போதே, கழக கண்மணிகள் வாழைத்தார், தேங்காய், நொங்கு உள்ளிட்டவற்றை தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக, நேற்றைய தினம் கோவை மாவட்டத்திற்கு சென்று இருந்தார். அப்போது, கூட்டத்திற்கு, ஆட்களை சேர்க்கும் விதமாக தனியார் பள்ளிகளின் பஸ்களை தங்களது, கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்களை சேர்த்து இருக்கின்றனர். இதனால், மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதுதவிர, பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
இதுதவிர, பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 55,000 மக்கள், முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். என, அக்கட்சியின் ஆசிபெற்ற ஊடகங்கள், பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டு இருந்தன. ஆனால், பொதுக்கூட்டத்தில் சமோசா, சுண்டல் மற்றும் பிச்சை எடுக்க வந்தவர்களையும் சேர்த்து மாற்று கட்சியை சேர்ந்த தொண்டர்கள் என தி.மு.க. கணக்கு காட்டியுள்ளது என நெட்டிசன்கள் கலாய்த்து இருந்தனர். மாற்று கட்சியை சேர்ந்த சுமார் 55,000 மக்கள் ஒரே நேரத்தில் இணைவதற்கு சாத்தியமில்லை. இதில், பல முரண்பாடுகள் இருக்கின்றது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுச்சியுரை ஆற்றிக் கொண்டு இருக்கும் போது, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பாதிபேர் தூங்கி இருக்கின்றனர். ரூ. 500 பணத்திற்கு ஆசைப்பட்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட, பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்ததாக செய்திகள் அங்கிருந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தான், பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட கழக கண்மணிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் கட்டப்பட்டு இருந்த தேங்காய், நொங்கு, வாழைத்தார் உள்ளிட்டவற்றை தூக்கி சென்று இருக்கின்றனர். அதுகுறித்தான, காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சுண்டல் கடை, பிரியாணி கடை, பஜ்ஜீ கடை, என்று ஆட்சியில் இல்லாத போதே கழக தோழர்கள் தங்களது கைவரிசையை காட்டி பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கின்றனர். தற்போது, ஆளும் கட்சியாக இருக்கிறார்கள் இன்னும் பல கின்னஸ் சாதனைகள் வெளிவரும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.