சேப்பாக்கத்தில் அடிப்படைவசதிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என அத்தொகுதி மக்கள் தங்களது கடும் கோவத்தை வெளிப்படுத்தி இருக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏழை, எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நீட் தேர்விற்கு தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தன. ஆனால், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வை ரத்து செய்வோம். அதன் ரகசியம், எங்களுக்கு மட்டுமே தெரியும் என பொதுக்கூட்டம் ஒன்றில் கூறியிருந்தார். இதுதவிர, அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்கா என மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இவர், வெற்றி பெற்ற பிறகு சில நாட்கள் தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை, தி.மு.க மற்றும் அதன் துணை ஊடகங்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி இருந்தன.
இதையடுத்து, நாட்கள் செல்ல செல்ல உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதிக்கு செல்வதை வெகுவாக குறைத்து கொண்டார். இதனால், தொகுதி மக்களின் அடிப்படைவசதிகள் முழுமையாக நிறைவேற்றபடவில்லை. அந்த வகையில், சேப்பாக்கத்தை சேர்ந்த ஏழை, எளியவர்கள் தங்களது குறைகளை உதயநிதியிடம் எடுத்துக் கூற முடியாமல் இன்று வரை திணறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், சேப்பாக்கத்தை சேரந்த பெண்மணி தனது வேதனைகளை ஆவேசத்துடன் எடுத்து கூறிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.