குடும்ப பெண்மணி ஒருவர் தனது டீக்கடையை கடந்த பல ஆண்டுகளாக சரக்கு கடையாக நடத்திய வந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.
எங்களுக்கு வாக்களித்தால், மதுக்கடைகளை உடனே மூடுவோம் என மக்கள் மீது சத்தியம் செய்யாத குறையாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி இருந்தனர். அதனை நம்பி, தி.மு.க.வை பொதுமக்கள் அரியணையில் அமர வைத்தனர். ஆனால், விடியல் ஆட்சியில் மதுவிற்கு எதிரான ஒரு விடிவு காலம் இன்று வரை தமிழகத்திற்கு ஏற்படவில்லை என்பதே நிதர்சனம்.
ஒருபக்கம் இருட்டிலும், திருட்டிலும் தமிழக மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளமாக இருக்க, மறுபுறம் மதுவால் தமிழகம் தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், பெண்மணி ஒருவர் மதுபோதையில், அதுவும் பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில், ஆண் ஒருவருடன் தகராறு செய்வது போன்ற காணொளி அண்மையில் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்து.
இதனை தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் குடிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அது தொடர்பான, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் நிறுவனமே செய்யாத ஒரு புதுவிதமான முயற்சியினை தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் செய்து இருக்கிறார். அதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் பெங்களூர் – சேலம் இடையிலான.. பழைய பைபாஸ் சாலையில் சந்துக்கடை என்று அழைக்கப்படும் டீக்கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மது பிரியர்களின் வசதிக்கேற்ப கூகுல் பே, போன் பே, பேடிஎம், வழியாகவும் பணம் செலுத்தி மது அருந்தும் வசதியும் இதில் இருப்பது தான் ஹைலைட். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும், ஒரு சிறு தவறு நடந்தால் கூட பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர் தி.மு.க. எம்.பி. ஆனால், இவரது தொகுதியில் நீண்ட நாட்களாக ஒரு குடும்ப இஸ்திரி மதுவிற்பனை செய்து வருவது மட்டும் எப்படி? இவருக்கு தெரியாமல் போனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.