பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் சட்டமன்ற தொகுதி எந்த அளவிற்கு மோசமாக உள்ளது என்பது குறித்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. மூத்த தலைவரும் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன். இவர், மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டவர். மேலும், எனது தாத்தா யார் தெரியுமா? எங்க அப்பா யார் தெரியுமா? என் குடும்ப பின்னணி தெரியுமா? என் படிப்பு என்னவென்று தெரியுமா? என வெட்டி விளம்பரம் செய்வதுடன் ஆணவத்தில் பேசுவதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
இதனிடையே, கடந்த 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவர் மதுரை மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அந்த வகையில், பழனிவேல் தியாகராஜனால் தமது தொகுதிக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படவில்லை என்பதற்கு கீழ்கண்ட காணொளியே சிறந்த உதாரணம். அதே தொகுதியில், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தற்போது அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர். இனிமேல், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, தமது தொகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.