இறை நம்பிக்கையில்லாதவர்களுக்கு எதற்கு கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என தி.மு.க.வை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இறை மறுப்பு கொள்கை கொண்ட கட்சியாக தி.மு.க. இருந்து வருகிறது. அக்கட்சியின், முன்னாள் மற்றும் இன்னாள் தலைவர் வரை ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை. அதற்கு, மாறாக ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும் காயப்படுத்தி வந்தனர் என்பதே நிதர்சனம். இதனை, தங்களது கொள்கைகளாக கொண்டும் இருக்கின்றனர். இதனிடையே, கடந்த 2021 -ஆம் ஆண்டு திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. இதனை, முன்னிட்டு கோவில் சார்பில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டவர்களின் பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இருக்கிறது.
ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை. அவர்களின், வழிபாட்டு முறைகளின் மீது துளியும் நம்பிக்கையில்லை. பிறகு, எதற்கு கோவில்களில் மட்டும் சிறப்பு பூஜை? செய்ய வேண்டும் என தி.மு.க.வை நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.