‘ஹிஜாப்’ உரிமை என்பது சரியல்ல: உச்ச நீதிமன்றமும் கைவிரிப்பு!

‘ஹிஜாப்’ உரிமை என்பது சரியல்ல: உச்ச நீதிமன்றமும் கைவிரிப்பு!

Share it if you like it

‘கல்வி நிறுவனங்களில் அனைத்து மாணவ, மாணவிகளும் சீருடை அணிந்து வரும்போது, முஸ்லிம் மாணவிகள் மட்டும் ‘ஹிஜாப்’ அணிந்து வருவது உரிமை என்று கூறுவது சரியல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் திடீரென ஹிஜாப் விவகாரம் தலைதூக்கியது. அதாவது, உடுப்பியிலுள்ள பி.யூ. கல்லூரியில் சுமார் 70 இஸ்லாமிய மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த ஏழெட்டு மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வர அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கும், கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஹிந்து மாணவிகள் காவி துப்பட்டாவும், மாணவர்கள் காவித் துண்டும் அணிந்து வந்தனர். இதன் காரணமாக, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியதால், மாணவ, மாணவிகள் சீருடையைத் தவிர வேறு எந்த ஆடையையும் அணியக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதோடு, கல்லூரிக்கும் காலவரையற்ற விடுமுறை அளித்தது.

இதை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை மாணவ, மாணவிகள் அணியக்கூடாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அப்போது, ஹிஜாப் இஸ்லாமிய சட்டப்படி அடிப்படைத் தேவை அல்ல என்று உத்தரவிட்டனர். இந்தத் தீரப்பையும் எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தினமும் விசாரித்து வருகிறது. இந்த சூழலில், நேற்று நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் அமர்வு, “எந்த உடை அணிவது உரிமை என்று கூறுவதுபோல், எந்த உடை அணியக் கூடாது என்று கூறுவதும் உரிமையாகுமா? மற்ற மதத்தினர் சீருடையை அணிந்து வரும்போது, இஸ்லாமிய மாணவிகள் மட்டும் ஹிஜாப் அணிந்து வருவதை உரிமை என்று கோர முடியுமா? இது சரியானதல்ல” என்று கூறியிருக்கிறது.


Share it if you like it