பழைய இரும்பு சாமான்களுக்கு  பேரிச்சம்பழம்: அரசுப் பேருந்தில் கழன்று ஓடிய பாகங்கள்!

பழைய இரும்பு சாமான்களுக்கு பேரிச்சம்பழம்: அரசுப் பேருந்தில் கழன்று ஓடிய பாகங்கள்!

Share it if you like it

பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அவனியாபும் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக கழன்று விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் ஆட்சியில் வெட்டி விளம்பரங்கள் மற்றும் ஆடம்பர செலவுகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கபட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் வரிப்பணம் பெருமளவு வீணடிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, அரசு சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணங்களினால், அதன் நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

உள்ளூர் மற்றும் அயலூர் பயணங்களுக்கு பெரும்பாலானவர்கள் அரசு பேருந்துக்களை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கின்றனர். போக்குவரத்து ஊழியர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால், தமிழகமே ஸ்தம்பித்து விடும் என்பதே உண்மை. அந்த அளவிற்கு, அரசுப்பேருந்து பொதுமக்களின் வாழ்வில் இரண்டற கலந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, விடியல் ஆட்சியில் அரசுப் பேருந்துகளின் தரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, எல்லாம் பேச வேண்டிய ஊடகங்கள், தி.மு.க. ஆட்சியில் கப்சிப் என அடங்கியுள்ளது.

இதனிடையே, பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து, அவனியாபுரம் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மாட்டுத்தாவணி அருகே சென்ற போது பேருந்தின் பாகங்கள் ஒவ்வொன்றாக கழன்று நடுரோட்டில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான, காணொளியை பாலிமர் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது.

விடியல் ஆட்சியில் அரசு பேருந்துக்களுக்கு, ஒரு விடிவு காலம் பிறக்கட்டும். அதன்பிறகு, ஈ.வெ.ரா. பெயரில் விமானம் விடலாம் என டி.ஆர்.பி. ராஜவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். நல்ல வேளை, பஸ்ஸா இருந்ததனால ரோட்டுல விழுந்தது. ப்ளைட்ல இருந்து விழுந்தா எவன் மண்டை மேலையே விழுந்திருக்கும் என இணையதளவாசி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.


Share it if you like it