அன்று வெங்காய ரோடு… இன்று சுண்ணாம்பு ரோடு!

அன்று வெங்காய ரோடு… இன்று சுண்ணாம்பு ரோடு!

Share it if you like it

சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சியில் அமைக்கப்பட்ட சாலை சுண்ணாம்பு போல உதிர்ந்து வரும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு, மக்களின் அடிப்படைவசதிகள் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதனிடையே, வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அண்மையில் தேர்வு செய்யப்பட்டது. அந்த வகையில், பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்டை கொட்டி சாலை அமைத்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணொளி ஒன்றினை வெளியிட்டு அதுகுறித்து கூறியதாவது; 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதியதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு நமது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 2269 கோடி ரூபாய் நிதியாக வழங்கியுள்ளது தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த அரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை பா.ஜ.க. வன்மையாகக் கண்டிக்கிறது என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தொழில்துறை பிரிவின் மாநில துணை தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சியில் ₹2.93 கோடி செலவில் போடபட்டுள்ள சாலை, 15 நாட்களில் வெறும் செருப்பு வைத்து காலில் தேய்த்தாலே உதிர்ந்து வருகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.


Share it if you like it