மிசா பத்தி நான் பேசினா நாறி போய்விடும்: முன்னாள் எம்.பி.யின் காணொளி வைரல்!

மிசா பத்தி நான் பேசினா நாறி போய்விடும்: முன்னாள் எம்.பி.யின் காணொளி வைரல்!

Share it if you like it

தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மிசா வரலாறு குறித்து அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி. பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் அண்மையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் நைனார் நாகேந்திரன், பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி. ராதா கிருஷ்ணன், உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதாவது; நீங்கள் தான் சிறைக்கு செல்ல அஞ்சுவீர்கள். மிசா வழக்கில் நீங்கள் சிறைக்கு செல்லவில்லை மு.க. ஸ்டாலின் அவர்களே. ஆனால், மிசா வழக்கில் சிறை சென்றது போல பொய்யை சொல்லி அலைந்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள், உண்மையிலேயே எதற்கு சிறைக்கு சென்றீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என அண்ணாமலை ஆவேசமாக பேசியிருந்தார்.

அண்ணாமலையின் பேச்சு, பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. இதையடுத்து, என்னசெய்வது என்று தெரியாமல் தி.மு.க.வின் அடிப்பொடிகள் பா.ஜ.க. தலைவரை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே, அ.தி.மு.க.வை சேர்ந்தவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாக இருந்தவர் நா. பாலகங்கா. இவர், தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மிசா வரலாற்று சம்பவங்களை புட்டு புட்டு வைத்து பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it