காலையில் இருந்து இங்கேயே சாவுரோம்: ஃப்ரீ பஸ்ஸே வேண்டாம்… குமுறும் பெண்கள்!

காலையில் இருந்து இங்கேயே சாவுரோம்: ஃப்ரீ பஸ்ஸே வேண்டாம்… குமுறும் பெண்கள்!

Share it if you like it

இலவச பேருந்து வேண்டாம் என சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் குமுறி இருக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வகையில், அறிவித்த திட்டம் தான் இலவச பேருந்து. அதாவது, மகளிர் அனைவரும் இலவசமாக பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது. இந்த கவர்ச்சி திட்டத்தில் மயங்கிய தாய் குலங்கள் அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களித்தனர்.

இதையடுத்து, தி.மு.க. ஆட்சிக்கு வந்து தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். அதன்பிறகு, அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதேசமயம், இத்திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, இலவச பயணத்துக்கான டிக்கெட் பெண்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இலவச பயண டிக்கெட்டை பெற்று பெண்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

இதனிடையே, சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் தொகுதி, கலைஞர் நகர் தெற்கு பகுதியில் தி.மு.க.வின் சார்பில் முப்பெரும் விழா விளக்கப் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேசிய பொன்முடி,

உங்களுக்கு எல்லாம் ரூ. 4,000 ஆயிரம் கொடுத்தது யாரு வாய் திறந்து சொல்லுங்க. இப்ப, நீங்க எப்படி? பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என தமிழக பெண்களை கிண்டல் செய்யும் விதமாக பேசியிருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் பொன்முடியின் கருத்து தமிழக பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி துளசி அம்மாள் என்பவர் ஓசி பஸ்ஸில் நான் பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை எனக்கு டிக்கெட் கொடு என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த காணொளி அண்மையில் இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து, இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியிருந்தது. மூதாட்டி பற்ற வைத்த நெருப்பு இன்று வரை கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிற்காக ஏராளமான பெண்கள் காத்திருந்தனர். ஆனால், பஸ் வரபோக இருந்ததே தவிர பெண்களை ஏற்றி செல்ல யாரும் தயாராக இல்லை. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெண்கள் காத்திருந்தனர். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பெண்கள் அவ்வழியாக வந்த பேருந்து ஒன்றினை வழி மறித்து டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it