முதல்வர் எச்சரிக்கை: தோழர்களுக்கு பொருந்துமா?

முதல்வர் எச்சரிக்கை: தோழர்களுக்கு பொருந்துமா?

Share it if you like it

மத துவேஷங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியிருப்பது உண்மை என்றால் திருமா, வீரமணி மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தி.மு.க ஆட்சியில் ஹிந்துக்களின் பண்பாடு, கலாச்சாரம், வழிபாட்டு முறை தொடர்ந்து இழிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி மற்றும் திமு.க.வில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தோழர்கள் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க ஆதரவு பெற்ற யூ டியூப் இணையதளமான யூ2 புரோட்டஸ். தில்லை நடராஜர் குறித்து மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. இதுதவிர, காவல்துறையில் பலர் புகார் தெரிவித்து இருந்தனர். அவதூறு பரப்பியவன் ஆளும் கட்சியின் பூரண ஆசி பெற்றவன் என்பதால் இதுவரை எந்த நடவடிக்கையுமில்லை.

இதையடுத்து, வி.சி.க. தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளவன். ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் ஹிந்தி கடவுளா? என்று கடந்த ஆண்டு மிக கடுமையாக பேசியிருந்தார். இதுதவிர, தொடர்ந்து ஹிந்துக்களை குறிவைத்து இன்று வரை புண்படுத்தி வருகிறார். ஞானசம்பந்தர் பெருமானை கொலைகாரர் என்று பேசியுள்ள, தீயசக்தி சமூக விரோதி திருமாவளவனை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா கோரிக்கை விடுத்திருந்தார்.

அதே போல, திருமணம் கடந்த உறவு என்று கள்ள உறவுக்கு புது விளக்கம் கொடுத்தவரும், தொடர்ந்து ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தி வருபவருமான சுப.வீரபாண்டியனுக்கு சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் இதே தமிழக முதல்வர் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில், மத துவேஷங்களில் ஈடுபடுவோர் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கூறுவது உண்மை என்றால் தனது கூட்டணி கட்சி தோழர்களை முதலில் கைது செய்ய முன்வருவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it