பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து புகார் கடிதம் வழங்கி இருக்கின்றனர்.
200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் டேவிட்சனை விசாரிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக, இருப்பவர் அண்ணாமலை. இவர், ஆளும் கட்சியின் ஊழல்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்யும் முறைகேடுகளை அவ்வபொழுது, நாட்டு மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதுதவிர, தி.மு.க. ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு குறித்தும், மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில், காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் தங்களது பதவியினை தவறாக பயன்படுத்தி, 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்களை வழங்கி இருக்கின்றனர். இதில், மதுரையில் உள்ள அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும், 72 போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், மதுரையில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் 128- க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், எங்கேயுமே இல்லாத அளவுக்கு ஒரு நகரில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எப்படி? இவ்வளவு போலி பாஸ்போர்ட்களை வழங்க முடியும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இதனிடையே, 200 பாஸ்போர்ட்கள் அல்ல 2,000-க்கும் மேல் வழங்கப்பட்டு இருக்கலாம் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளும் விதமாகவும், தி.மு.க. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் கடிதத்தினை வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.